புதன், 30 ஜூலை, 2008

அரிச்சந்திர முலாம் பூசிய அவசர காலப் பொய்களுக்கே அமோக விளைச்சல் இன்று.உண்மைகளை தேடிய இதயத்தின் சாலைகளெங்கும் பொய்களின் பாதத் தடம் மட்டுமே.வறண்ட வார்த்தைகளை விற்றுத் தள்ளுகிறது ஈரமாய்க் கிடக்கும் நாக்கு.சில பொய்கள் மௌனத்துக்குப் பின்னால் மறைந்திருந்து சிரிக்கும்.சில பொய்கள் புன்னகைக்குப் பின்னால் சிரிக்காமல் இருக்கும்.குலுக்கிய கைகள் விட்டுப் போன பொய்கள் விரலிடுக்கில் பிசுபிசுத்துக் கிடக்கும்.சில பொய்கள் தலைமுறைப் பழக்கத்தோடு வெங்காய ஆடைகளாய்உருமாறி இருக்கும்.பொய்க்கால் குதிரைகளை சில நிஜக்கால்கள் நிற்க வைப்பது போல,பல பொய்கள் உண்மையின் ஆடைகளை தற்காப்புக்குப் போர்த்தியே தலைநீட்டும்,உள்ளுக்குள் அவைநிர்வாணமாய் உலவும்.பொய்மையும் வாய்மையிடத்து என்றான் வள்ளுவன்,தவறாய் புரிந்ததாலோ என்னவோ பொய்மைகள் மட்டுமே இன்று வாய்மையின் இடத்தில்.
Regards
kailash

கருத்துகள் இல்லை: