பிரிய நிலவே,எத்தனை நாளாகிறதுஉன்னைப் பார்த்து.ஓர்பதினான்காம் பிறைபோலநினைவிடுக்கில்நகர்கின்றன நாட்கள்.காதலின் கணங்களும்காத்திருப்பின் கனங்களும்கால்களைபாறையோடு பதியனிட்டதாய்இறுகிக் கிடக்கின்றன.தேடலின் விழிகள் கூடஉறைந்து விட்டன.ஆனாலும்விடாமல் என் உள்ளத்தை மட்டும்உழுது கொண்டே இருக்கிறேன்.உன்ஒவ்வோர் புன்னகைக்கும்உயிரின் ஒருபாதையைஉயிலெழுதிய பழக்கத்தால்இன்றுமிச்சமிருப்பதெல்லாம்பட்டா இல்லாத பகுதிகளே.என்பொருளாதாரப் பல்பறித்துகாதலுக்குகால நெய்ததில்என் முதுகெலும்பு முறித்தேகைத்தடி செய்ய வேண்டியகட்டாயம் எனக்கு.ஆனாலும்,உன் வயல்க்காட்டுத் தூறல்வற்றி விடவில்லை என்றே,என் நாற்றுக்கள்நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.ஒத்திகைக் காலக்குத்தகை முடிந்ததால்,அரங்கேற்ற மேடைதூண்களில்தவறாமல் தவமிருக்கிறேன்.நீவந்தபின் விரிப்பதற்காய்தோகைகளைக் கூடதுடைத்து வைத்திருக்கிறேன்.நீ,வரும் வடிவத்தை மறவாமல்கடிதத்தில் அனுப்பு.நீபல்லக்கில் வருவாயானால்நான்கடிவாளத்தோடுகாத்திருக்கக் கூடாதில்லையா ?
Regards
kailash
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக