காதல் என்னும்ஓர்மின்விசிறி என் வீட்டுவிட்டத்தில்விடாமல் சுற்றுகிறது !இழுக்க இழுக்கமேலெழும்பும் ஓர்காதல் பட்டம்என் கூரை மேல் பறக்கிறது.காதல் என்னும்ஓர் கண்ணிவெடி,நினைவுகளின் பாரம் தாங்கிஉள்ளுக்குள்தவறாமல் வெடிக்கிறது.காதல் தீயைஅணைப்பதற்காய் ஊற்றும்அத்தனைதண்ணீர்ச் சிந்தனைகளும்எண்ணையாகவேமாறி விழுகின்றன.அணை உடைத்துப் பாயும்காதலை,என் கட்டைவிரல்களால்பொத்த முடியவில்லை.அதுஒரு முறை தேய்த்தாலே,அலாவுதீன் பூதமாய்அவதாரமெடுக்கிறது.காதலெனும்அந்த ஒற்றை விளக்குஎன்அத்தனை கண்களையும்அடைத்து விட்டுப் போனது.காதலெனும்அந்த கீழ்திசைத் தென்றல்என்அத்தனைக் கதவுகளையும்உடைத்து விட்டுப் போனது.கனவுகளுக்குப் பயந்துகண்களைத் திறந்தால்,கனவுகள் வந்துதிறந்த கண்களில் இறங்கிபார்வையைப் பிடுங்கிச்செல்கின்றன.வலுக்கட்டாயமாய் அதன்இறகுகளை அறுத்தால்அது சிறகுகளை அகலமாக்கிஉயரமாய் பறக்கிறது.என்ன செய்வதென்றுதெரியவில்லை.ஒருவேளைபோரிடாமல் மண்டியிட்டால்சமாதான உடன்படிக்கையோடுசென்றுவிடக் கூடுமோ ?வேண்டாம்,திண்ணையில் வைத்தஎண்ணை விளக்கில் வீழும்,விட்டிலாய் அது என்வீட்டில் சுற்றிவரட்டும்.அவிழ்ந்து வீழும்அமாவாசை இருட்டைவிட,எட்டாத உயரத்திலேனும்நிலவைப் பார்ப்பதேநிம்மதியாய் இருக்கிறது !
Regards
Kailash
புதன், 30 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக