வியாழன், 31 ஜூலை, 2008

learn english

வணக்கம் உறவுகளே!
இன்று நாம் Grammar Patterns -1 றில் பதினொன்று மற்றும் பன்னிரண்டவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாக கற்கப் போகின்றோம்.
நீங்கள் எமது பாடங்களை தொடர்ந்துக் கற்று வருபவராயின் இன்று என்னப் பாடம் என்பதை நீங்களாகவே அறிந்திருந்திருப்பீர்கள். அதாவது
Grammar Patterns-1 இன் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.
அதனடிப்படையில் இதுவரை நாம் விரிவாகக் கற்றவை.
1. I do a Job.
2. I am doing a job.
3. I did a job.
4. I didn't do a job.
5. I will do a job.
6. I won't do a job.
7. Usually I don't do a job.
8. I am not doing a job.
9. I was doing a job.
10. I wasn't doing a job.
இன்று விரிவாக கற்கப் போவது பதினொன்று மற்றும் பன்னிரண்டாவது வாக்கியங்களையாகும்.இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை இலக்க வரிசைக் கிரமத்தில் தொடரும்படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர எளிதாக இருக்கும்.
சரி இன்றையப் பாடத்திற்குச் செல்வோம்.
11. I will be doing a job.நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை
.12. I won't be doing a job.நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
இவ்விரு வாக்கியங்களும் எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Future Continuous Tense" அல்லது "Future Progress Tense" என்பர்.
இந்த எதிர்காலத் தொடர்வினையின் பயன்பாடானது ஒரு செயல் அல்லது நிகழ்வு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருக்கும் என்பதை முன்கூட்டியே வெளிப்படுத்துவதாகும்.
(The future continuous tense expresses action at a particular moment in the future.)
Positive (Affirmative)Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ingI /You /He /She /It / We / You /They + will + be + doing a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.
NegativeSubject + Auxiliary verb + Auxiliary verb + not + Main verb with ingI /You /He /She /It /You /We /They + won’t + be + doing a jobQuestion (Interrogative)Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ingWill + I /you /he /she /it /you /we /they + be + doing a job?
கவனிக்கவும்: இந்த எதிர்காலத் தொடர்வினை கேள்வியாகப் பயன்படும் பொழுது "Auxiliary verb" அதாவது "துணை வினை" இரண்டு இடத்தில் பயன்படுவதை அவதானியுங்கள்.
நாம் கற்ற கடந்தப் பாடங்களில் அநேகமாக ஒரு வாக்கியம் கேள்வியாக மாறும் பொழுது அதன் துணைவினை "Auxiliary verb" வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும். ஆனால் இன்றையப் பாடத்தில் ஆரம்பத்திலும் அதன் பின் "Subject" " இற்குப் பின்னாலுமாக இரண்டு இடங்களில் வந்துள்ளது. இதை கவனித்துக்கொள்ளுங்கள்.
இது (invariable) மாற்ற இயலாதது.
கீழுள்ள உதாரணங்களையும் பாருங்கள்.
Will you be doing a job?நீ செய்துக்கொண்டிருப்பாயா ஒரு வேலை?
Yes, I will be doing a job.ஆம், நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.
No, I won’t be doing a job.இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
Will you be speaking in English?நீ பேசிக்கொண்டிருப்பாயா அங்கிலத்தில்?
Yes, I will be speaking in English.ஆம், நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்
No, I won’t be speaking in English.இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கமாட்டேன் ஆங்கிலத்தில்.
Will you be going to school?நீ போயிக்கொண்டிருப்பாயா பாடசாலைக்கு?
Yes, I will be going to school.ஆம், நான் போய்க்கொண்டிருப்பேன் பாடசாலைக்கு.
No, I won’t be going to school. (will + not)இல்லை, நான் போய்க்கொண்டிருக்கமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே நாம் கற்ற உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் (Affirmative Sentence) வாக்கியங்களை கேள்விப் பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.சரி பயிற்சியைத் தொடருங்கள்.1. I will be speaking in English.நான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தில்.2. I will be sitting on the beach.நான் அமர்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில்.3. I will be sun-bathing in Bali.நான் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன் பாளியில்.4. I will be coming back to homeநான் திரும்பி வந்துக்கொண்டிருப்பேன் வீட்டிற்கு.5. I will be staying with my friend.நான் இருந்துக்கொண்டிருப்பேன் எனது நண்பருடன்.6. I will be celebrating my birthday.நான் கொண்டாடிக்கொண்டிருப்பேன் எனது பிறந்தநாளை.7. I will be signing the contract.நான் கையொப்பமிட்டுக்கொண்டிருப்பேன் உடன்படிக்கை(யில்)8. I will be playing tennis at 10 am.நான் விளையாடிக்கொண்டிருப்பேன் டென்னிஸ் 10 மணிக்கு.9. I will be lying on a beach tomorrow .நான் சாய்ந்துக்கொண்டிருப்பேன் கடற்கரையில் நாளை.10. I will be having dinner at home.நான் (இரவு) சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் வீட்டில்.11. I will be singing in the concert on Tuesday.நான் பாடிக்கொண்டிருப்பேன் சங்கீதக் கச்சேரியில் செவ்வாய் கிழமை.12. I will be going to Norway this summer.நான் போய்க்கொண்டிருப்பேன் நோர்வேயிற்கு இந்த கோடை காலத்தைக் (கழிக்க)13. I will be coming to work next week.நான் வந்துக்கொண்டிருப்பேன் வேலைக்கு அடுத்த வாரம்.14. I will be working this weekend.நான் வேலைசெய்துக்கொண்டிருப்பேன் இந்த வாரக்கடைசியில்.15. I will be sleeping in the hotel.நான் நித்திரையடித்துக்கொண்டிருப்பேன் விடுதியில்.16. I will be eating dinner with my friends this eveningநான் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன் எனது நண்பர்களுடன் இன்று மாலை.17. I will be dancing at the party.நான் ஆடிக்கொண்டிருப்பேன் விருந்துபசாரத்தில்.18. I will be doing my duty.நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது கடமையை.19. I will be practicing English at nightநான் பயிற்சித்துக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் இரவில்.20. I will be speaking English in the officeநான் பேசிக்கொண்டிருப்பேன் ஆங்கிலம் அலுவலகத்தில்.21. I will be going to university.நான் போய்க்கொண்டிருப்பேன் பல்கலைக்கழத்திற்கு.22. I will be translating English to Tamil.நான் மொழிமாற்றிக்கொண்டிருப்பேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.23. I will be flying on the flight.நான் பறந்துக்கொண்டிருப்பேன் விமானத்தில்.24. I will be studying for the exam.நான் படித்துக்கொண்டிருப்பேன் பரீட்சைக்காக.25. I will be doing my homework.நான் செய்துக்கொண்டிருப்பேன் எனது விட்டுப்பாடம்.
Homework:A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.B. மேலுள்ள உதாரணங்களைப் பார்த்து இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.C. இன்று நாம் கற்ற (Future Continuous Tense) எதிர்காலத் தொடர்வினை வாக்கியங்களைப் போல் நாளை, அடுத்த மாதம், அடுத்த ஆண்டு இதே நேரம் இதே திகதி என்னென்ன செய்துக்கொண்டிருப்பீர்கள் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். பின் அவற்றைப் பட்டியலிட்டுக்கொண்டு அதனை நாம் இன்று பயிற்சி செய்ததுப் போன்று ஆங்கிலத்தில் எழுதி பயிற்சி செய்யுங்கள்.
கவனிக்கவும்:
இவ்வாறு தொடர் வாக்கியங்களாகவும் எழுதிப் பயிற்சி செய்யலாம்.I will be waiting for you when your plane arrives tonight.நான் காத்துக்கொண்டிருப்பேன் உனக்காக உனது விமான வந்தடையும் பொழுது இரவு.Sarmilan will be playing on the computer when his mother comes home. சர்மிலன் விளையாடிக்கொண்டிருப்பான் கணனியில் அவனது தாயார் வீட்டிற்கு வரும் பொழுது.
I will be studying when you come.நான் படித்துக்கொண்டிருப்பேன் நீ வரும் பொழுது.
At the same time tomorrow I will be staying in America.இதே நேரத்தில் நாளை நான் இருந்துக்கொண்டிருப்பேன் அமெரிக்காவில்.
சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
இன்றையப் பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, எமது வழமையான மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Posted by HK Arun at Tuesday, July 22, 2008 2 comments
Labels: , ,
Thursday, July 3, 2008

ஆங்கில பாடப் பயிற்சி 12 (Past Continuous Tense)
இன்று நாம் விரிவாக கற்கப் போவது Grammar Patterns 1 இன் 9 மற்றும் 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களையாகும். அதே இலக்க வரிசையில் Grammar Patterns 2, Grammar Patterns 3 யும் ஒரு முறைப் பார்த்துக் கொள்ளுங்கள்.9. I was doing a job.நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.10. I wasn't doing a job.நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.இவற்றை தமிழில் “இறந்தக் கால தொடர்வினை” என்று கூறுவர். ஆங்கிலத்தில் "Past Continuous Tense" அல்லது "Past Progressive Tense" என்றழைக்கப்படுகின்றது. அதாவது ஒரு செயல் அல்லது சம்பவம் ஒரு வரையரைக்குள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது என்பதை இந்த "இறந்த காலத்தொடர்வினை" விவரிக்கிறது.நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் மற்றப் பாடங்களை தொடருங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சி நெறியை தொடர மிகவும் எளிதானதாக இருக்கும்.
இந்த 9, 10 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களில் I, He, She, It, போன்றவற்றுடன் "was" இணைந்து வரும். You, We, They உடன் "were" இணைந்து வரும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.Positive (Affirmative)Subject + Auxiliary verb + Main verb + ingI /He /She /It + was + doing a job.You / We /They + were + doing a job.இதில் 'Subject' வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளது.NegativeSubject + Auxiliary verb + not + Main verb + ingI /He /She /It + wasn’t + doing a jobYou /We /They + weren’t + doing a jobQuestion (Interrogative)Auxiliary verb + Subject + Main verb + ingWas + I /he /she /it + doing a job?Were + you /we /they + doing a job? இவற்றில் Auxiliary verb "துணை வினை" வாக்கியத்தின் முன்பாகவும், Subject அதாவது "விடயம்" அதன் பின்னாலும் மாறி வந்துள்ளது.இப்போது இந்த “இறந்த காலத்தொடர்வினை” வாக்கியங்களை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம். கீழுள்ள உதாரணங்களை பாருங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டால் நீங்களாவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.Were you doing a job?நீ செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?Yes, I was doing a job.ஆம், நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.No, I wasn’t doing a job. (was + not)இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.Was he speaking in English?அவன் பேசிக்கொண்டிருந்தானா அங்கிலத்தில்?Yes, he was speaking in English.ஆம், அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்No, he wasn’t speaking in English. (was + not)இல்லை, அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.Were you going to school?நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்களா பாடசாலைக்கு?Yes, we were going to school.ஆம், நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.No, we weren’t going to school. (were + not)இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.இப்போது கீழே (Affirmative Sentences) வாக்கியங்கள் 25 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின் அவற்றை கேள்வி பதிலாக மாற்றி அமையுங்கள்.1. I was reading a book.நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம்.2. I was looking for a job.நான் தேடிக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.3. I was studying.நான் படித்துக்கொண்டிருந்தேன்.4. I was watching television.நான் பார்த்துக்கொண்டிருந்தேன் தொலைக்காட்சி.5. I was making dinner.நான் தயாரித்துக்கொண்டிருந்தேன் (இரவு) உணவு.6. I was waiting in the bus stand.நான் காத்துக்கொண்டிருந்தேன் பேரூந்து நிறுத்தகத்தில்.7. I was waiting for you.நான் காத்துக்கொண்டிருந்தேன் உனக்காக.8. I was talking with my fiancéeநான் பேசிக்கொண்டிருந்தேன் எனது காதலியிடம்/ நிச்சயிக்கப்பட்டவளிடம்.9. I was snowboarding.நான் பனிச்சறுக்குப் படகோட்டிக்கொண்டிருந்தேன்.10. I was driving through the desert.நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டிருந்தேன் பாலைவனத்தின் ஊடாக.11. I was sitting at the class room.நான் அமர்ந்திருந்துக்கொண்டிருந்தேன் வகுப்பு அறையில்.12. I was listening to the news.நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் செய்திகளுக்கு.13. I was discussing with my father.நான் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன் எனது தந்தையுடன்.14. I was complaining to policeநான் முறையிட்டுக்கொண்டிருந்தேன் காவல் துறையிடம்.15. I was listening to my iPod.நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன் ஐபொட்டிற்கு.16. I was sleeping last night.நான் நித்திரைக்கொண்டிருந்தேன் கடந்த இரவு.17. I was writing the email.நான் எழுதிக்கொண்டிருந்தேன் மின்னஞ்சல்.18. I was working at the factory.நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் தொழிற்சாலையில்.19. I was eating bread.நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் வெதுப்பி.20. I was playing soccer.நான் விளையாடிக்கொண்டிருந்தேன் சொக்கர்.21. I was walking on the street.நான் நடந்துக்கொண்டிருந்தேன் தெருவில்.22. I was singing in the concert.நான் பாடிக்கொண்டிருந்தேன் சங்கீதக் கச்சேரியில்.23. I was wearing a full sleeves shirt.நான் உடுத்திக்கொண்டிருந்தேன் ஒரு முழுக் கை சட்டை.24. I was walking past the car.நான் நடந்துக்கொண்டிருந்தேன் மகிழூந்தைக் கடந்து.25. I was eating ice-cream.நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் குளிர் களி.Homework:1. இந்த 25 வாக்கியங்களையும், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.
2. மேலுள்ள அதே 25 வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள் பார்க்கலாம். நினைவில் வைத்துக்கொள்ளங்கள். (I/ He/ She/ It உடன் was + verb with ing வரும். You/ We/ They உடன் were + verb with ing வரும்.)3. நீங்கள் நேற்று இதே நேரம், கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த வருடம் எனனென்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்? என்னென்ன உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பவற்றைப் பட்டியல் இட்டு மேலே நாம் கற்றதைப் போன்று ஆங்கிலத்தில் எழுதுங்கள்.நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிவதால், உங்களின் வாசிக்கும் ஆற்றலின் தன்மையையும், ஆங்கில அறிவையும் மிக எளிதாக வளர்த்துக்கொள்ளலாம். அதேவேளை எழுத்தாற்றலையும் இலகுவாகப் பெற்றுவிடலாம்.இலக்கண விதி முறைகள்இறந்தக்கால தொடர்வினை “Past Continuous Tense” இன் செயல்பாட்டை ஐந்து விதமாக வகைப்படுத்தப்படுத்தலாம். (There are five main uses of this tense) அவை:1. ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் என்ன நடந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.உதாரணம்:I was reading a book yesterday evening.நான் வாசித்துக்கொண்டிருந்தேன் ஒரு புத்தகம் நேற்று மாலை.எப்பொழுது வாசித்துக்கொண்டிருந்தேன்? - நேற்று மாலை.வாசித்தேன் என்றால் – இறந்தக் காலம்வாசித்துக்கொண்டிருந்தேன் என்றால் – இறந்தக்கால தொடர்வினை,அதாவது செயல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு அது தொடர்ச்சியாக ஒரு வரையரைக்குள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. (Action or situation that had already started and was still continuing at a particular time.)இதுப்போன்ற 25 வாக்கியங்களையே மேலே நாம் பயிற்சி செய்தோம். மேலும் சில வாக்கியங்களை இங்கே பாருங்கள்.The sun was shining this morning.சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது காலையில்.The birds were singing.பறவைகள் பாடிக்கொண்டிருந்தன.The children were playing in the garden.குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர் தோட்டத்தில்.வரைப்படம் - 12. ஒரு சம்பவம் அல்லது நேரத்தை குறிப்பிட்டு, அச்சமயம் என்ன நிகழ்ந்துக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல்.Last night at 6 PM, I was eating dinner.கடந்த இரவு 6.PM க்கு, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் இரவு சாப்பாடு.At midnight, we were driving through the desert.நள்ளிரவில், நாங்கள் வாகனமோட்டிக்கொண்டிருந்தோம் பாலைவனத்தின் ஊடாக.Yesterday at this time, I was talking with my family.நேற்று இதே நேரத்தில், நான் பேசிக்கொண்டிருந்தேன் எனது குடும்பத்தாருடன்.வரைப்படம் - 2
3. இறந்த காலத்தொடர்வினையுடன் always, constantly போன்ற வினையெச்சங்களை இணைத்து பயன்படுத்தல். அநேகமாக இவை வெறுப்பூட்டிக்கொண்டிருந்த, எரிச்சலூட்டிக் கொண்டிருந்த, கோபமூட்டிக்கொண்டிருந்த, திகைப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படுத்தப் பயன்படுகிறது.
இது "used to" என்பதின் பயன்பாட்டிற்கு ஒத்தது. (Used to என்பதின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.)
உதாரணம்:
She was always coming to class late.அவள் எப்பொழுதும் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்புக்கு தாமதமாக.
Karuna was always irritating me.கருணா எப்பொழுதும் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தான் என்னை.
I didn’t like him because, He was constantly talking.நான் விரும்பவில்லை அவனை ஏனெனில், அவன் (அடிக்கடி) தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.வரைப்படம் - 3

மேலே இலக்கண விதி முறைகளாக 1, 2, 3 என மூன்று பிரிவுகளாக பிரித்துக் கற்றாலும் அவை ஒரே மாதிரியானவைகளே. வரைப் படங்களைப் பார்க்கவும்.
4. இரண்டு செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடைப் பெற்றுக்கொண்டிருந்தது என்பதை விவரித்தல். (two actions were happening at the same time.)உதாரணம்:Malathi was writing a letter while Pandian was reading the News paper.மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள். Sothiya was cooking dinner while her friend was setting the table.சோதியா சமைத்துக்கொண்டிருக்கும் போது அவளுடைய நண்பர் மேசையை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.
The baby was crying while we were having our dinner.குழந்தை அழுதுக்கொண்டிருக்கும் போது நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.I was studying while she was making dinner.நான் படித்துக்கொண்டிருக்கும் போது அவள் தயாரித்துக்கொண்டிருந்தாள் (இரவு) சாப்பாடு. People were sleeping while army was shelling.மக்கள் நித்திரைக்கொண்டிருக்கும் போது இராணுவம் எறிகணை வீசிக்கொண்டிருந்தது.
வரைப்படம் - 4

5. ஒரு செயல் அல்லது நிகழ்வு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இடையில் ஏற்பட்ட இன்னுமொரு நிகழ்வை வெளிப்படுத்தல். இதில் இறந்தக்கால தொடர்விணையுடன் சாதாரன இறந்தக்கால விணையும் இணைந்து பயன்படும். (use the Past Continuous tense with the Past Simple tense)உதாரணம்:
I was walking in the park (நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிகழ்வு) when it started to rain. (இடையில் ஏற்பட்ட நிகழ்வு)I was walking in the park when it started to rain.நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது மழைப் பெய்ய ஆரம்பித்தது.I was brushing my teeth when my mother called me.நான் எனது பற்களை துலக்கிக்கொண்டிருக்கும் போது எனது தாயார் அழைத்தார் என்னை.I was eating dinner when somebody knocked on the doorநான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் தட்டினர் கத(வை)வின் மேல்.Ravi was sleeping last night when someone stole his car.ரவி நேற்று இரவு நித்திரையடித்துக்கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருவர் திருடிவிட்டார் அவனுடைய மகிழூந்தை.I was walking past the car when it exploded நான் மகிழூந்தைக் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அது (மகிழூந்து) வெடித்தது. I was having a beautiful dream when the alarm clock rang.நான் ஒரு அழகான கணவு கண்டுக்கொண்டிருக்கும் போது கடிகாரம் ஒலித்தது.வரைப்படம் - 5
While, When பயன்பாடுகள்
உதாரணம் 1:Malathi was writing a letter while Pandian was reading the News paper.மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்Malathi was writing a letterமாலதி எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு கடிதம்.while – (அப்)போது (எழுதிக்கொண்டிருக்கும் போது)Pandian was reading the News paper.பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்.எப்போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் செய்தித் தாள்? மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது.
எனவே இவ்விரண்டு வாக்கியங்களையும் இணைத்து "மாலதி ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் போது பாண்டியன் வாசித்துக்கொண்டிருந்தான் ஒரு செய்தித்தாள்" என ஒரே தொடர் வாக்கியமாக அமைந்துள்ளதை அவதானிக்கவும்.உதாரணம் 2:I was walking in the park when it started to rain.நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது.இதனையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.I was walking in the park – நான் நடந்துக்கொண்டிருந்தேன் பூங்காவில்.when – எப்பொழுது (நடந்துக்கொண்டிருக்கும் பொழுது)it started to rain - ஆரம்பித்தது மழைப் பெய்வதற்குஎப்பொழுது மழைப் பெய்ய ஆரம்பித்தது? நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் போது.எனவே இவ்விரண்டு வாக்கியங்களை இணைத்து "நான் பூங்காவில் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது மழைப்பெய்ய ஆரம்பித்தது." என்று ஒரே வாக்கியத் தொடராக அமைந்துள்ளது.
இதுப்போன்ற பயன்பாட்டின் போது முதல் நடந்துக்கொண்டிருந்த செயலை அல்லது நிகழ்வை "background situation" என்கின்றனர்.குறிப்பு:இவ்வாக்கியங்களை இப்படியும் பயன்படுத்தலாம்.I was studying while she was making dinner.While I was studying, she was making dinner.I was walking past the car when it exploded.When the car exploded, I was walking past it.Adverb - வினையெச்சம்கீழுள்ள உதாரணங்களில் இறந்த காலத்தொடர்வினையின் போது always, only, never, ever, still, just போன்ற வினையெச்சங்கள் வினையுடன் இணைந்து பயன்படும் போது, அவ்வாக்கியங்களின் கருப்பொருள் எவ்வாறு மாறுப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.She was coming to class late.அவள் வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக. இவ் வாக்கியத்தில் "வினையெச்சம்" பயன்படுத்தும் போது அதன் அர்த்தத்தை அவதானியுங்கள்.She was always coming to class late.அவள் எப்பொழுதுமே வந்துக்கொண்டிருந்தாள் வகுப்பிற்கு தாமதமாக.குறிச்சொற்கள் Signal wordswhilewhenசரி! பயிற்சிகளைத் தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.இன்றைய பாடத்தில் எவ்வித கேள்விகள், சந்தேகங்கள் இருப்பின் தயங்காமல் எழுதுங்கள். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில் சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்டு எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.எமது இந்த ஆங்கில பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகள் இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்கப்படும். அல்லது புதிதாக தொடங்கியிருக்கும் "ஆங்கிலம் துணுக்குகள்" பகுதியூடாக வழங்கப்படும்.இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக் கொள்ள மறவாதீர்கள்.
நன்றிஅன்புடன் ஆசிரியர் அருண்
Posted by HK Arun at Thursday, July 03, 2008 3 comments
Labels: , ,
Wednesday, July 2, 2008

ஆங்கிலம் துணுக்குகள் 2 (Use a/an - Vowels and Consonant)
ஆங்கிலத்தின் மொத்த 26 எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் - 5, மெய் எழுத்துக்கள் - 21 ஆகும்.உயிர் எழுத்துக்கள் Vowels Sounda e i o u = 5மெய் எழுத்துக்கள் Consonant Soundb c d f g h j k l m n p q r s t v w x y z = 21பொதுவாக ஆங்கிலத்தில் ஒரு/ஓர் என்பதைக் குறிக்க பெயர் சொல்லுக்கு முன்பாக ‘a’ பயன்படுத்தப் படுகின்றது. சில இடங்களில் ‘an’ என்றும் பயன்படுத்தப் படுகின்றது. இதில் "a" பயன்படுத்தும் இடங்கள் எவை? "an" பயன்பத்தும் இடங்கள் எவை? என்பதைப் பார்ப்போம்.பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்துகின்றது.உதாரணமாக:I am a Sri Lankanநான் ஒரு இலங்கையன்.I am a student.நான் ஒரு மாணவன்.This is a carஇது ஒரு மகிழூந்து.This is a book.இது ஒரு புத்தகம்.He is a teacher.அவர் ஒரு ஆசிரியர்.பொதுவாக a, e, i, o, u போன்ற உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் சொற்களுக்கு முன்னால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க "an" பயன்படுத்தப் படுகின்றது.உதாரணம்:This is an animal - (animal begins with a vowel sound)இது ஒரு மிருகம்.I am an Indianநான் ஒரு இந்தியன்.I am an English teacherநான் ஒரு ஆங்கில அசிரியர்.He is an old manஅவர் ஒரு வயதான(வர்) மனிதர்.கவனிக்கவும்மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.உயிர் எழுத்துக்களான a, e, I, o, u போன்ற பெயர் சொல் முன்னால் வந்தாலும் ‘a’ வாகவே பயன்படுபவைகள்.a user - யூசர் என்பதன் சத்தம் ‘உ” சத்தமாக இல்லாமல் “யு” வாக ஒலிப்பதால் ‘a’ பயன்படுத்தப் படுகிறது. (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)a university - இதன் சத்தமும் “உ” சத்தமாக இல்லாமல் “யு” என்றே ஒலிப்பதை அவதானியுங்கள்.a European country – இதிலும் ‘இ’ சத்தமாக இல்லாமல் ‘யு’ போன்று ஒலிப்பதே அதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)மெய் எழுத்து முன்னால் வந்தும் ‘an’ பயன்படும் இடங்கள். an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிர் எழுத்தின் சத்தமாக ஒலிப்பதால் இவ்வாறு “an” பயன்படுத்தப்படுகின்றது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)an honour - இதுவும் “அ’ உயிர் எழுத்தின் சத்தமாகவே ஒலிக்கிறது.இதற்கான காரணம் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் என்று மட்டும் பார்க்கப்படாமல், உயிர் எழுத்துக்களாக ஒலிப்பவைகள், மெய் எழுத்துக்களாக ஒலிப்பவைகள் எனும் உச்சரிப்புக்கு அமையவே இவ்வாறு பயன்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.இது போன்ற பயன்பாடுகளில் ஆங்கிலேயர்களும் பிளைவிடுவதாகக் கூறப்படுகின்றது.இவற்றை நாம் கவனமாக அவதானித்து கற்பது மிகவும் பிரயோசனமானதாக இருக்கும்.

1 கருத்து:

சின்னப்பொண்ணு சொன்னது…

என்ன சார்! http://aangilam.blogspot.com பதிவுகளை அப்படியே ஆட்டைய போட்டு இருக்கிங்க????